சிலநேரம் மெய்சிலிர்ப்போடு, பலநேரம் எரிச்சலோடு,
சிலநேரம் மகிழ்ச்சியோடு, பலநேரம் துக்கத்தோடு,
சிலவை இயல்பாக, பலவை மிக செயற்கையாக,
முதிர்ச்சியோடு சில, சிறுபிள்ளைத்தனமாக பல.
நான் உன்னிடம் நம் காதலைச் சொல்லும்
அந்தக் கணங்கள் எப்படி இருக்குமோ?!
நீ என்னருகில் இல்லாதபோது, நான் உன்னருகில்.... இந்த வரிகளாய்.
No comments:
Post a Comment